தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடப்பு ஆண்டு முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 11ம் வகுப்பு மாணவர்களும் எழுதலாம். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வு 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த கல்வித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் பள்ளிகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் என்ற இணையதளத்தில் பதிவேற்றும் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சிபிஎஸ்சி உள்ளிட்ட பள்ளிகளின் மூலம் தேர்வு எழுத மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இது குறித்து தேர்வு இயக்குனர் கூறியது, தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வை ஒரு தேர்வு அறயினுல் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டி எழுத வேண்டும். அதன்படி ஒரு தேர்வு மையத்தில் 300 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.அது மட்டுமில்லாம தேர்வுமையங்கள் மாணவர்களின் ஒன்றியத்தில் அல்லது அருகாமையில் அமைந்திருக்க வேண்டும். இந்த பணியை மிகுந்த கவனம் செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துள்ளார். மேலும் இப்பணியில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதவாறு செய்ய வேண்டும். இந்த பணியை இன்றுக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.