நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக வருடம் தோறும் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இளநிலை பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.