இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டெர்பியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் எமி ஜோன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் சொதப்பிய நிலையில், ஃப்ரீயா கெம்ப் அதிரடியாக விளையாடி 37 பந்தில் 51 ரன்கள் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் மாயா பவுச்சர் 34(26) ரன்கள் எடுத்தார். இந்திய பெண்கள் அணி தரப்பில் ஸ்னே ரானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷபாலி வர்மா 20 ரன்னிலும், ஹேமலதா 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி அசத்தினார்.
மந்தனா 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79* ரன்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் அவருடன் ஜோடி சேர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29*(22) ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மந்தனா ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன..
.@mandhana_smriti bags the Player of the Match award for a terrific unbeaten 7⃣9⃣-run knock as #TeamIndia beat England in the 2nd T20I to level the series. 👏👏
It all comes down to the decider to be played on Thursday. 👊
Scorecard ▶️ https://t.co/Xvs9EDrb2y #ENGvIND pic.twitter.com/WTwA7nXshP
— BCCI Women (@BCCIWomen) September 13, 2022
Smriti Mandhana with her Player of the Match trophy 🔥💙#ENGvIND #CricketTwitter pic.twitter.com/Lc94msf50e
— Female Cricket (@imfemalecricket) September 13, 2022