Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்… “வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள்”… பாராட்டு விழா…!!!!!

குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பி.டி.ஏ தலைவர் அப்துல் முனாப், கட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர், மாலினி ரவிசந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி தேன்மொழி என பலர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

Categories

Tech |