தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வந்த சோதனையில் 32 லட்சம் பணம், 1028 கிராம் தங்கம், 1948 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 10 கார்கள் முக்கியமான 315 ஆவணங்கள், இரண்டு வங்கி பெட்டக சாவிகளும் சிக்கியுள்ளன. அதேபோன்று மற்றொரு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 18 லட்சம் பணம், 1872 கிராம் தங்கம், 8 கிலோ வெள்ளி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது