பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்குவதை விட்டு மக்கள் தற்போது மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அதிகளவு வாங்கி வருகின்றன. இதனிடையே அவ்வபோது எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சற்று தோல்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி இந்த பிரச்சனைக்கு தற்போது தீர்வை கொண்டு வந்துள்ளது.
அதாவது எலக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதை தடுப்பதற்கான தீர்வு இந்த நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபயர்ப்ரூஃப் பேட்டரிகள் வடிவில் வந்துள்ளது . தங்களது நிறுவனத்தின் பேட்டரி அனைத்து வாகனங்களிலும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் லித்தியம் ஐயன் பெரோ பாஸ்பேட் ஃபயர் புரூப் பேட்டரிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.