சூப்பர் குட் பிலிம்ஸ் 100-வது திரைப்படத்தில் யார் நடிக்கின்றார் என்பது குறித்து ஜீவா பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. தற்பொழுது ஆகா ஓடிடி தளத்தில் கேம் ஷோ சர்க்கார் தொகுத்து வழங்குகின்றார். இதன் பிரமோஷனுக்காக ஊடகத்தை சந்தித்த ஜீவா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது திரைப்படத்தில் விஜய் நடிப்பாரா என கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு ஜீவா கூறியுள்ளதாவது, சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது திரைப்படத்தில் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. இது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பாக அவரை சந்தித்து பேசி உள்ளோம். கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்தால் அவர் நடிப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் கதை அமைந்தால் நானும் நடிப்பேன் எனக் கூறியிருக்கின்றார். விஜய் ஏற்கனவே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி படமாக்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.