Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறி நாய் கடிச்சுட்டு…! 17 ஊசி போட்டு விடுங்க.. எச்.ராஜா பரபர பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, வெறி நாய் கடித்து விட்டதா என்று கேட்பார்கள், நிச்சயமாக ஆ. ராசாவிற்கு கடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், உடனே அவரை கூட்டிட்டு போய் மருத்துவமனையில் வைத்து, தொப்புளை சுற்றி 17 ஊசி போட்டு,  சிகிச்சை அளிப்பது நல்லது. அவர் தொடர்ந்து பேசி வருவது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, இந்து விரோதமானது.

ஏனென்றால் நீங்கள் இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, அதுவாக உருவானது. ஆனால் வர்ணாசரம் பற்றி முதலில் பேசி இருப்பது பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னதை அப்படியே திருவள்ளுவர் சொல்கிறார். 972 என்று எனக்கு ஞாபகம் இருக்கு. பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்… இவர்கள் அதோடு நிறுத்திக் கொள்வது.

அரைகுறை திரவிடியன்ஸ் ஸ்டாக் இருக்கின்றார்கள் அல்லவா….  அவர்களெல்லாம் அதற்கு மேல் பேசுவதில்லை. வள்ளுவர் தெளிவாக சொல்லுகிறார்..பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்,  ஒற்றுமைக்கான விசேஷத் தன்மை சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையால், அந்த சிறப்பு செய் தொழிலில் இல்லை, இது கண்ணன் சொன்னதை தான் வள்ளுவரும் சொல்லிருக்கிறார்.

கண்ணன் என்ன சொல்கிறார் ? நான் நான்கு வர்ணங்களை உருவாக்கியிருக்கிறேன், எதன் அடிப்படையில் அதை வரிசைப்படுத்துகிறேன் என்றால்,  குணம், தகுதி, கர்மா, வேலை. இன்றைக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நம் நாட்டில் இருப்பது அம்பேத்கர் அவர்கள் கொடுத்திருக்கின்ற இந்திய அரசியலமைப்பு, அந்த இந்திய அரசமைப்பு படி தான் எல்லாரும் செயல்படுகிறார்கள். ஆ.ராசா ஆளுநர் ஆர்.என்  ரவியை மோசமாக பேசியிருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |