Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அக். 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பெயரிலோ, முன்னெழுத்திலோ மாற்றம் இருப்பின் ஆதாருடன் வங்கி கணக்கின் நகலையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். முதுகலை பயில்வதற்கு ஆண்டுக்கு ரூபாய் 20,000 என 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.

 

Categories

Tech |