Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழைப்பழ துண்டை விழுங்கிய குழந்தை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்….!!

வாழைப்பழ துண்டை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்றரை வயதுடைய சையது மௌலானா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாழைப்பழ துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கினான். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |