டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். இதைபற்றி ஆராய்ந்த இந்திய அரசாங்கம் இதுபோன்ற விபத்துக்கள் மேலும் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி அமேசானில் விற்கப்படும் சிறியரக உலோக கிளிப்புகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை செயலிழக்க வைக்ககூடிய பல்வேறு பொருட்களை விற்பதற்கு அமேசானுக்கு தடைவிதித்து அறிவிப்பு ஒன்றை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
காரில் ஒருவர் சீட்பெல்ட் அணியாமல் அமரும் போது அதை வலியுறுத்துவதற்காக அலாரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அமேசானில் விற்பனை செய்யப்படும் இந்த சிறிய உலோக கிளிப்புகளை பயன்படுத்தி அந்த அலாரங்களை நாமே நீக்கிக்கொள்ளலாம். வெறும் 249 ரூபாய்-க்கு இந்த பொருள் விற்கப்படுகிறது. அவற்றில் இந்த கிளிப்புகளை பயன்படுத்தி உங்களது கார் அலாரத்தை நீங்களே செயலிழக்க செய்யலாம் எனும் விளம்பரத்தையும் அமேசான் செய்துள்ளது.
விலை குறைவாகவும், எளிமையாகவும் இருப்பதனால் எளிதில் இது பலரை சென்றடைந்தது. இதுகுறித்து தெரிந்துகொண்ட நம்மூர் மக்கள் மிக அதிகளவில் இந்த கிளிப்புகளை வாங்கி அந்த அலாரத்தை வேலை செய்யாமல் செய்தனர். இது மிகப்பெரிய அளவில் விபத்துக்களை ஏற்படுத்தி உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே இந்த பொருட்களை இனி விற்பதற்கு தடைசெய்து இந்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.