ஆண்களுக்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றார்.
ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேர்வு செய்து மாதம் தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது..இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை சமீபத்தில் பரிந்துரைத்தது ஐசிசி.
மூத்த ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஆகஸ்ட் மாதத்திற்கான விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் சிக்கந்தர் ராசா. நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர், சிக்கந்தர் ராசா மற்றும் இங்கிலாந்து நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விருதுக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் 36 வயதான ஜிம்பாப்வே வீரர் ராசா ஆகஸ்ட் மாதத்திற்க்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. ரசிகர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ராசா. இதன்மூலம் ஐசிசியின் மாதாந்திர சிறந்த வீரர் விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் சிக்கந்தர் ராசா..
அதேபோல ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத், பெத் மூனி மற்றும் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இதில் தஹ்லியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்..
இதுகுறித்து ராசா கூறியதாவது, ஐ.சி.சியிடமிருந்து மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றதில் நான் மிகவும் தாழ்மையும் பெருமையும் அடைகிறேன். இது போன்ற விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களில் என்னுடன் சேஞ்ச்ரூமில் இருந்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த நன்றி தொழில்நுட்ப ஊழியர்களுக்கும், வீரர்களுக்கும் செல்கிறது. நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை” என்று தெரிவித்தார்.