Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 51 பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு பட்டியல்….. என்னென்ன தெரியுமா…..? வெளியான அறிவிப்பு….!!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்தினார். அப்போது க.மயிலை வட்டாரத்தில் உள்ள 51 அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா மூன்று சுய உதவி குழு வீதம் 153 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு காலை உணவு தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும் உணவு வகை பட்டியலில் உள்ள பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

காலை சிற்றுண்டி பட்டியல்:

  • மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக திங்கள் கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பாா் வழங்கப்படும்.
  • செவ்வாய்கிழமை சேமியா கிச்சடி மற்றும் காய்கறி சாம்பாா் வழங்கப்படும்
  • புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பாா் வழங்கப்படும்
  • வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பாா் வழங்கப்படும்.
  • வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி, சாம்பாா், ரவா கேசரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |