சிம்பு தன் மனதில் நினைத்ததை சொல்ல அது தனுஷை குத்திகாட்டி பேசியதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிம்பு. இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். தற்பொழுது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகின்றார். ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படும் நிலையில் திருமணம் செய்ய பயமாக இருப்பதாக சிம்பு கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, அவசர அவசரமாக திருமணம் செய்து அதற்குப் பிறகு கருத்து வேறுபாடு, சண்டை, விவாகரத்து என பிரச்சனைகள் வந்து பிரிந்துவிடக் கூடாது என்கிற பயத்தால் திருமணத்தை தள்ளி போட்டு இருப்பதாக கூறி இருக்கின்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவர் தனுஷை தான் குத்தி காட்டி பேசியுள்ளார். ஏன் என்றால் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பிரிந்து விட்டார். இதைக் கேட்ட தனுஷ் ரசிகர்கள் நீங்கள் இப்படியே தனுஷை குத்தி காட்டிக்கொண்டே இருங்கள். அவர் பாலிவுட், ஹாலிவுட் என வேற லெவலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றார் எனக் கூறியுள்ளார்கள்.