பேருந்தில் தங்க நகையை தவறவிட்ட பயணியிடம் பத்திரமாக தங்க நகை கொடுத்துள்ளார் கண்டக்டர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து விரைவு பேருந்து சென்னைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சென்னையிலிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தது. இதன் பின்னர் இந்தபேருந்தில் கண்டக்டராக பணியாற்றும் உதயகுமார் என்பவர் பேருந்தை சோதனை செய்ததில் இரண்டு பவுன் தங்கச் சங்கில் கிடந்துள்ளது. இதன் பின்னர் அவர் அதை எடுத்து பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார்.
இந்த நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த பாலகுமாரன் என்பவர் தன்னுடைய இரண்டு பவுன் தங்கச் செயின் தொலைந்து விட்டதா? பேருந்தில் கிடைக்கின்றதா என பார்க்க வந்திருக்கின்றார். அப்பொழுது பணிமனை மேலாளரிடம் பாலகுமாரன் தனது தங்க சங்கிலி குறித்து அடையாளங்களை கூறியிருக்கின்றார். அப்பொழுது பேருந்தில் கிடந்ததாக எடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி பாலகுமாரனுடையது என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பணிமனை கிளை மேலாளர் முன்னிலையில் பாலகுமாரனிடம் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது. இதில் நேர்மையாக செயல்பட்ட கண்டக்டர் உதயகுமாருக்கு போக்குவரத்து ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றார்கள்.