ராணி எலிசபெத் மறைவிற்கு அரை கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு அறிவித்தது.
இதையடுத்து நேற்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இது போலவே மாநகராட்சி அலுவலகம், ஆயுதப்படை மைதானம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை.