ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் என்பவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் அப்பகுதி வாலிபர்களுடன் சேர்ந்து சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்கள். இதன் பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர்.
இதில் நிதிஷ் ஆற்றில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற வைரமுத்துவும் ஆற்றில் மூழ்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டதில் வைரமுத்துவை மீட்டார்கள். ஆனால் நித்திஷை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நித்தீஷை தேடினார்கள். இந்த தேடுதல் பணியானது ஆறு மணி நேரத்திற்கு நீடிக்க பின் பிணமாக நித்தீஷை மீட்டார்கள். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் உயிரிழந்த இரண்டு மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.