சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்திலும், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை யாஷிகா ஆகியோர் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த காரணத்திற்காக நடிகர் சிவா மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார். அவர் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சிக்கு வர தாமதம் ஏற்பட்டதாக கூறினார். இதனையடுத்து காலை முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மிகவும் சோர்வாக இருந்தேன். உங்களைப் பார்த்தவுடன் புது எனர்ஜி வந்து விட்டது. உங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார். மேலும் நடிகர் சிவா மற்றும் யாஷிகா விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.