Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி…. ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!

ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து ஆன்லைன் வர்த்தக சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணத்தினால் பெரும்பாலும் அனைத்து ஆன்லைன் விற்பனை சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சேவை நிறுவனங்கள் இரண்டு உள்ளது. தங்களது பணிகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தனிப்பான்கள் கைப்பற்றிய நிலையிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் காரணமாக அந்நாடு மிக மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது.  கிளிக் ஆஃப் என்று மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் தனது வணிகத்தை நிறுத்திக் கொள்வதாக சனிக்கிழமை மாலை அறிவித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் போது ஆன்லைன் வணிகத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று பக்கல் என்ற மற்றொரு ஆன்லைன் வணிக நிறுவனமும் தனது வணிகத்தை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |