உலகம் முழுவதும் பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பலர் பொழுதுபோக்குக்காக, வருமானத்திற்காக, தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காக பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று instagram. இதில் ரீல்ஸ் வசதி இருப்பதால் பல பாடலுக்கு நடனம் ஆடுவது. போட்டோ சூட் நடத்தி அதில் போடுவது உள்ளிட்ட பலவிதமான செயல்களை செய்ய முடியும். பயனாளர்களுக்கு ஏற்றபடி instagram அவ்வப்போது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
அது என்னவென்றால் இன்ஸ்டாகிராம் செயலியில் பிறரின் பதிவுகள் மற்றும் ரில்களை ரீபோஸ்ட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் சோதனையில் இருப்பதாகவும் விரைவில் அனைவருக்கும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஷேர் ஆப்ஷன் தர வேண்டும் என்று பலர் கோரிவந்த நிலையில் தற்போது இந்த அம்சம் தரப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.