இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய, நாடு திரும்பிய நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவரை சந்தித்தது சர்ச்சையாகி இருக்கிறது.
இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்ததால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடினர். போராட்டம் தீவிரமடைந்ததால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினார். இந்நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய அவருக்கு அரசாங்கம், பெரிய பங்களா ஒன்றை கொடுத்தது.
அவருக்கு, ராணுவ பாதுகாப்பும் வழங்கினர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே இவற்றை நேரடியாக மேற்பார்வையிட்டார். எனவே, மக்களுக்கு அவர் மீது இருந்த ஆதங்கம் மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், ராஜபக்சே குடும்பத்தினரின் கையில் இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, கோட்டபாயவின் வீட்டிற்கு அவரை சந்திக்க நேற்று சென்றிருக்கிறார்.
நாட்டில் இருக்கும் தற்போதைய சூழல், நிதி நெருக்கடி, ஆகியவற்றை பற்றி இருவரும் பேசியிருக்கிறார்கள். எனவே, கோட்டபாயவின் சொல்லிற்கு, ரணில் கை பொம்மையாக ஆடுகிறார் என்று மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இதன்காரணமாக, நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.