தனது மனைவியுடன் குலதெய்வம் கோவிலில் எடுத்த புகைப்படத்தை ரவீந்தர் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக டொமஸ்டிக் பிளைட்டில் புறப்பட்டார்கள். இந்த நிலையில் மனைவியுடன் கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதற்கு என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ, இனி துவங்கலாம் குலதெய்வத்தின் அருளோடு. நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி. நம்மை வெறுக்கும் உலகத்துக்கு மிக்க நன்றி. ஒருநாள் உங்களை நாங்கள் நேசிக்க வைப்போம்-என்றும் உங்கள் ரவி அண்ட் மிஸஸ் ரவி எனக் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.
https://www.instagram.com/p/CiY67ocpikA/?utm_source=ig_embed&ig_rid=e84688f5-e99f-4ea9-ba93-e773d780eec5