Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னை மன்னிக்கவும்.! நான் தான் தோல்விக்கு காரணம்….. சோகத்திலும் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த சதாப் கான்..!!

இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு நான் தான் காரணம் என்று ஆல்ரவுண்டர் சதாப் கான் ட்விட் செய்துள்ளார்..

15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் நிஷாங்கா 8, குஷால் மெண்டிஸ் 0, தசுன் ஷனாக 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றியதால் இலங்கை ஆரம்பத்திலிருந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த அணி 8.5 ஓவரில்  58/5 என இருந்தது.

இதனால் இலங்கை அணி 100 ரன்களை கூட தாண்டாது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் 6ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹசரங்காவும், ராஜபக்சேவும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹசரங்கா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 36(21) ரன்களில் ஆட்டம் இழந்தாலும், இறுதிவரை நின்ற ராஜபக்சே 6 பவுண்டரி, 3 சிக்ருடன் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் தான் அந்த அணி 170 ரன்களை தொட்டுள்ளது.

இதையடுத்து 171 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும்  கேப்டன் பாபர் அசாம் இருவரும் களமிறங்க, மதுஷன் வீசிய 4ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் பக்கர் ஜமான் 0 ரன்னில் ஆட்டம் இழந்ததால் பாகிஸ்தானுக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது.. 22/2  என தவித்த அந்த அணிக்கு 3ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.

வழக்கம்போல முகமது ரிஸ்வான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜோடியாக இப்திகார் அகமது (32 ரன்கள்) போராடி ஆட்டம் இழந்தார். மேலும் முடிந்தவரை போராடிய முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 55(49) ரன்கள் எடுத்த நிலையில், நெருக்கடியான கட்டத்தில் ஆட்டம் இழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. அதன்பின் வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 6 ஆவது முறையாக ஆசிய கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி கோப்பையை வென்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஏனென்றால் ஐசிசி தரவரிசை பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும்  அந்த அணி இளம் படைகளை வைத்து முக்கிய போட்டியில் தைரியமாக விளையாடி 6ஆவது முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்று அதிர்ஷ்டத்தை பெற்ற பாகிஸ்தான் அணி சொதப்பியது என்று தான் சொல்ல வேண்டும்.. ஏனென்றால் துபாய் மைதானத்தில் சேசிங் செய்யக்கூடிய அணிகள் தான் 99 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் அறிந்ததே.. அதற்காக அந்த அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இருந்தால் எப்படி என்பது போலத்தான் இருந்தது நேற்றைய பாகிஸ்தானின் ஆட்டம்.. அவர்கள் இடையில் செய்த சில தவறுகளும் ஆட்டத்தை மாற்றி விட்டது.. ஆம் முதல் 10 ஓவரில் போட்டியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பாகிஸ்தான் அணி அதன் பின் கோட்டை விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

ராஜபக்ச சிறப்பாக ஆடி வந்த நிலையில் 18.5 வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்றார்.. அந்தப் பந்து மிட் விக்கெட் திசையில் உயரமாக சென்று எல்லைக்கோட்ட அருகே வந்தபோது ஆசிப் அலி கட்சிதமாக பிடிக்க கவனத்தை செலுத்தி கையை வைத்த போது, திடீரென எங்கிருந்தோ வேகமாக வந்து உள்ளே புகுந்த மற்றொரு பாகிஸ்தான் வீரர் சதாப் கான் தான் மோதி கேட்சை பிடிக்காதது மட்டுமில்லாமல் அவரையும் காயப்படுத்தி விட்டு நானும் காயப்படுத்தி அந்த பந்தும் சிக்ஸர் சென்று விட்டது.

 

ஷதாப் காணும் காயமடைந்து மைதானத்திலேயே சிறிது நேரம் படுத்து விட்டார். இது பார்க்க சற்று பரிதாபமாக இருந்தாலும், இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் யாருமே பரிதாபப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஆசிப் அலியிடம் சென்ற அந்த பந்தை எங்கிருந்தோ வந்து ஓடி வந்து தேவையில்லாத வேலை பார்த்துவிட்டார் என்று தான் அவர்கள் கூறி வருகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் ஹரிஸ் ரவூப் வீசிய 18ஆவது ஓவரில் 4ஆவது பந்தை ராஜபக்சே சிக்ஸர் அடிக்க முயல, அது நேராக மிக உயரத்திற்கு  செல்ல அதையும் ஷதாப் கான் பிடிக்க முயன்று விட்டுவிட்டார்.. அப்போது ராஜபக்சே 46 ரன்களில் இருந்தார்.. அணியின் ஸ்கோர் 142/6 என்று இருந்தது. இதை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என்பது உண்மை.. பொதுவாக சதாப் கான் ஒரு சிறந்த பீல்டர்.. அவர் கேட்சை விட்டதை தான் பாக்.ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. பாகிஸ்தான் தோல்விக்கு சதாப் கான் தான் காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு நான் தான் காரணம் என்று ஆல்ரவுண்டர் சதாப் கான் ட்விட் செய்துள்ளார்.. அதில், கேட்சுகள் தான் போட்டிகளில் வெற்றி பெற்று தரும். என்னை மன்னிக்கவும், இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். நான் என் அணியை வீழ்த்தினேன். நசீம்ஷா, ஹரிஸ் ரவூப், நவாஸ் மற்றும் முழு பந்துவீச்சு தாக்குதல் சிறப்பாக இருந்தது. முகமது ரிஸ்வான் கடுமையாக போராடினார். ஒட்டுமொத்த அணியும் தங்களால் இயன்றவரை முயற்சித்தது. நான் செய்த தவறுகள் தான் தோல்விக்கு முக்கிய காரணம்.. வெற்றி பெற்ற இலங்கைக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |