உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த கொடுமை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடன்டா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கிண்டல் செய்வதும் பாலியல் ரீதியாகவும், தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 2-ம் தேதி பள்ளியை விட்டு வரும் போது அந்த இளைஞர்கள் வழக்கம் போல் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி அந்த இளைஞர்களில் ஒருவரான தினேஷ் யாதவ் என்பவரை கண்ணத்தில் அறைந்துள்ளார்.
பின்னர் அவரது நண்பர்கள் அவரை பெண்ணிடம் அரைவாங்கியவன் என்று கேலி செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் அவமானம் அடைந்த இளைஞர் சிறுமியை பழிவாங்க முடிவு செய்தார். சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் தினேஷும் அவரது நண்பனும் சேர்ந்து சிறுமியின் வாயில் துணியை கட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமாக இருந்த இருவரை சிறுமி அளித்த புகாரின் பெயரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.