இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிக்க பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்கிறார்கள். நேரடியாக சென்று டிக்கெட் எடுப்பதை விட பலரும் ஐ ஆர் சி டி சி செயலி மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்ய தெரியாதவர்கள் நேரில் சென்று டிக்கெட் எடுத்து பயணிக்கிறார்கள்.
இந்நிலையில் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்து பயணிக்கும் பலரும் இந்த பிரச்சனையை சந்திக்கின்றன. அதாவது ரயில் டிக்கெட் தொலைந்து விட்டால் அல்லது கிழிந்து விட்டால் என்ன செய்வது என்று யோசிப்பார்கள். அப்படி ஒரு சூழலில் டிக்கெட் இல்லாமலும் பயணிக்க முடியும். அதாவது ரயில் டிக்கெட் தொலைந்து விட்டால் அதற்கு பதிலாக டூப்ளிகேட் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு நீங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். சார்ட் தயாரிப்பதற்கு முன்னர் கன்ஃபார்ம் டிக்கெட் அல்லது RAC டிக்கெட் காணாமல் போனால் அதற்கு பதிலாக டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படும்.அதன்படி இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கான டூப்ளிகேட் டிக்கெட்டை பெறுவதற்கு ஐம்பது ரூபாய் கட்டணமும் பிற வகுப்புகளுக்கு 100 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
சார்ட்தயாரிக்கப்பட்ட பிறகு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் காணாமல் போனால் கட்டணத்தில் 50 சதவீத தொகையை செலுத்திய பிறகு தான் டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படும். இதாய் வைத்து நீங்கள் ரயிலில் பயணிக்கலாம். மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்களுக்கு டூப்ளிகேட் டிக்கெட் கிடைக்காது.
டூப்ளிகேட் டிக்கெட் வாங்கிய பிறகு ஒருவேளை உங்களுடைய ஒரிஜினல் டிக்கெட் கிடைத்து விட்டால் இரண்டு டிக்கெட்டுகளையும் ரயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுண்டரில் காட்டி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.ஆனால் நீங்கள் கூடுதலாக செலுத்திய பணத்தில் 5 சதவீதம் மட்டுமே உங்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.