Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஞானவாபி மசூதி வழக்கு – விசாரணைக்கு உகந்தது என தீர்ப்பு …!!

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதை ஞானவாபி மசூதி கடுமையாக எதிர்த்திருந்தது.

மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும்,  இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல எனவும், அவர்களுடைய வாதங்களை நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்தார்கள். இது தொடர்பான விசாரணைகளுக்கு பிறகு இன்று வாரணாசி நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதிலே இந்து பெண்கள் தொடுத்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அடுத்தபடியாக செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இந்த மனுவின் மீது விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது. இது ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியின் சுவற்றில் அமைந்திருக்கும் செங்கார் கவுரி ஆலயம் தொடர்பான விவகாரம் என்றாலும், ஞானவாபி மசூதி உள்ளே சிவலிங்கம் இருக்கிறது. ஞானவாபி மசூதி இந்து கோவிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று தனியாக சர்ச்சை நடந்து இருக்கிறது.

ஆகவே தான் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. ஹிந்து மனுதாரர்கள் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததாக கருதி தற்போது கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்திலே எதிர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே உத்தரபிரதேசம் முழுவதும் இந்த தீர்ப்பு காரணமாக பல்வேறு பதட்டம் நிலவக்கூடிய பகுதிகளிலே பாதுகாப்பு இன்று அதிகரிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக வாரணாசியிலே பல இடங்களிலே தடை உத்தரவு மற்றும் இணையதள சேவைகளை நிறுத்தி வைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலே தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

Categories

Tech |