Categories
சினிமா தமிழ் சினிமா

SIMA மேடையை அலறவிட்டு….. விருதை தட்டி தூக்கிய தமிழ் பிரபலங்கள்….. யார் யாருக்கு விருது?….. இதோ லிஸ்ட்….!!!!

2021 ஆம் ஆண்டுக்கான சைமா விருது விழா பெங்களூருவில் நடைபெற்றது. ஆகஸ்ட் 10, 11 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில்  கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சைமா விருது நிகழ்ச்சியில் விருதுகள் வென்ற தமிழ் பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கர்ணன் படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனுக்கு வழங்கப்பட்டது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “சார்பட்டா பரம்பரை” படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான கிரிட்டிக்ஸ் விருது சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் ஆர்யாவிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகைக்கான விருது கர்ணன் படத்தில் தனுஷ் அக்காவாக நடித்த லட்சுமி பிரியாவிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வினுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘தலைவி’ படத்தில் நடித்த நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குநருக்கான விருது ‘மாஸ்டர்’ படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது மாநாடு படத்திற்காக நடிகர் சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டது.

மிகச்சிறந்த நடிப்புக்கான விருது மண்டேலா படத்தில் நடித்த யோகிபாபுவிற்கு வழங்கப்பட்டது.

Categories

Tech |