Categories
தேசிய செய்திகள்

“நம்பலனா பொறுத்திருந்து பாருங்க” கண்டிப்பா நாங்க சொன்னது நடக்கும்….‌ துணை முதல்வர் திட்டவட்டம்….!!!!!

20 லட்சம் பேருக்கு கண்டிப்பாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

பீகாரில் 8-வது முறையாக நிதீஷ் குமார் முதல்வராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இவர் பாஜக கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் ஆதரவு வைத்துக் கொண்டு முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அதன்பின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு வருகிற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர் கட்சிகளை கூட்டணி சேர்க்கும் முயற்சியில் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சரத் பவார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், முன்னாள் முதல்வர்களையும் சந்தித்து பேசினார். இதனையடுத்து நேற்று முன்தினம் துணை முதல்வர் தேஜேஸ்வி யாதவ் பீகாரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கண்டிப்பாக 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

அதன் பிறகு எங்களுடைய உறுதிமொழியை நம்ப மறுப்பவர்கள் பொறுத்திருந்து பாருங்கள். ஒரு சிலர் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பாங்க. அவர்களுக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது. எங்களுடைய உறுதி மொழியை கண்டிப்பாக நாங்கள் நிறைவேற்றுவோம். நிச்சயம் அது நடக்கும் என்று கூறினார். மேலும் சுதந்திர தின விழாவின்போது முதல் மந்திரி அரசு மற்றும் அரசு அல்லாத இடங்களில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதிமொழி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறார்கள், எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பது குறித்த எந்த விவரங்களையும் இதுவரை கூறவில்லை.

Categories

Tech |