Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்…. இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பயணசீட்டு கவுண்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதனையடுத்து ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 14-ஆம் தேதியும், ஜனவரி 13-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதியும், ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவர்கள் செப்டம்பர் 16-ஆம் தேதியும், ஜனவரி 15-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 17-ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ரயில்வே நிலையங்களில் காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |