பேங்க் ஆஃப் பரோடா கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி மே மாதம் 4.40% ஆகவும், ஜூன் மாதம் 4.90% ஆகவும், இந்த ஆகஸ்ட் மாதம் 5.40% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்தவகையில் பொதுத்துறை வங்கியானபேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.20% வரை உயர்த்தியுளதாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து தவணைக்கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஓராண்டுக்கான கடன் வட்டி விகிதம் 7.70%-ல் இருந்து 7.80% ஆகவும், 6 மாத கடன்களுக்கு 7.55%-ல் இருந்து 7.65% ஆகவும் உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், கார், வீட்டுக்கடன்களுக்கான இஎம்ஐ உயரும். இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.