செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் என்பது எல்லாருக்கும் பொது தானே, அப்படி இருக்கும் போது ஓபிஎஸ்சுக்கு ஒரு சட்டம், ஜேசிடி பிரபாகரனுக்கு ஒரு சட்டம், மனோஜ் பாண்டியனுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சிபிசிஐடி வந்து கண்ணுக்குத் தெரிந்த சிசிடிவி கேமராவில் யாரெல்லாம் அங்கே உள்ளே வந்து கொள்ளையடித்து போனார்கள்,
பொருளை கொள்ளையடித்தார்கள் என்று கண்கூடாக தெரிகிறது. அவர்களுக்கு பென்டிரைவ் போட்டு கொடுத்தாச்சு, கொடுத்து இவ்வளவு தூரம் வழக்கு போட்டு, இன்னும் ஏன் அவர்களை பிடிக்கவில்லை, கைது செய்யவில்லை, அதுதான் இப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஒவ்வொரு தொண்டனுடைய கேள்வி.
ஓபிஎஸ்ஸை ஏன் கைது செய்யவில்லை ? அதுதான் எங்களுடைய கேள்வி, ஓபிஎஸ்-ஸை கைது செய்ய வேண்டும். எப்படி ஓபிஎஸ் கட்சி பெயரை உபயோகப்படுத்த முடியும் ? 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி அவர் கட்சி உடைய அடிப்படை உறுப்பினரே கிடையாது, அவரை நீக்கிய பிறகு அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ?
அதனால் அதிமுகவின் லெட்டர் பேடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடியை உபயோகிப்பதோ, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பெயரை சொல்வதோ எந்த வகையில் பயன்படுத்தினாலும் அது சட்டவிரோதம் என தெரிவித்தார்.