செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 50 வருடமாக இந்தியாவை ஆட்சி செய்து ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை, ஒருத்தர் அஞ்சு மாசத்துல நடந்து ஏற்படுத்தப்போறாரா ? இதெல்லாம் உங்களுக்கே வேடிக்கையா இல்லையா ?
காலையில ஒன்னே கால் மணி நேரம், சாயங்காலம் ஒன்னே கால் மணி நேரம் நடை பயிற்சி. இதில் என்ன தேச ஒற்றுமை வரும். மோடியை எதிர்ப்பதற்கு வலிமையான ஆள் ராகுல் காந்தி இல்ல. ஏன் நாங்க எல்லாம் மோடி எதிர்க்கலையா ? கால்ல பூ போட்டு வணங்கி கொண்டா இருக்கின்றோம். அதெல்லாம் இல்ல, மோடியை எதற்க ஆள் வேணும், அதுக்கு ராகுல் காந்தி ஆள் இல்லை.
அடுத்த பிரதமர் தமிழன் தானா என்ற கேள்விக்கு, நாங்கள் தனிச்சு போட்டி போடுகின்றோம். தனிச்சு போட்டி என்றால், எங்கள் கட்சியும் பிரதமர் போட்டியில் பங்கேற்கும். எங்க கட்சி கூட்டணி எல்லாம் இல்ல. தனிச்சு தான் போட்டி இருக்கிறோம் என தெரிவித்தார்.