Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகன் யாத்ரா சூப்பர் கேரக்டர்”…. தனுஷ் சொன்ன ரகசியம்…!!!!!!

தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவின் கேரக்டர் குறித்து பேட்டியில் கூறியது பற்றி தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை தான் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சென்று ஜனவரி மாதம் இருவதும் பிரிவதாக அறிவித்தார்கள். மகன்கள் தற்பொழுது ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றார்கள். தனுஷ் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மகன்களை அழைத்துச் சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுகின்றார்.

இந்நிலையில் தனுஷின் முந்தைய பேட்டி ஒன்றில் யாத்ரா குழந்தையாக இருந்த பொழுது செய்த சேட்டைகள் குறித்து பேசி உள்ளார். அது குறித்து தற்பொழுது ரசிகர்கள் பேசி வருகின்றார்கள். அந்த பேட்டியில் தனுஷ் கூறியுள்ளதாவது, என் மகன் சூப்பர் கேரக்டர். வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை மட்டும் தான் உடைப்பான். சீப்பான பொருட்களை எல்லாம் தொடவே மாட்டான். டேய் உங்க தாத்தா தான் சூப்பர் ஸ்டார். உங்க அப்பா இல்லடான்னு அடிக்கடி சொல்லுவேன். ஆனால் அவன் கேட்க மாட்டான். எங்க அம்மாவிடம் சென்று புகார் செய்ய முடியவில்லை. நீயே அப்படிதான் என கூறுவார்கள் என கூறினார்.

Categories

Tech |