தூவானம் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
சின்னமனூர் அருகில் மேகமலை வன உயிரியல் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 33,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இதில் பணி புரிவதற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு வசித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள ஐந்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இதனால் தூவானம் மற்றும் இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரி நீரை திறக்க வேண்டும் என மின்சார துறை முடிவு செய்திருந்தது. அதன் படியே அணிகளில் இருந்து தண்ணீரும் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.