சேலத்தை சேர்ந்த வேல் சத்ரியன் என்பவர் பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.சினிமாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வேலு சத்ரியன் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.
அந்த புகாரின் பேரில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுமார் 25 பேரிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்று நடிக்க வைப்பதாக ஆபாச படம் எடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது வீட்டில் பல பெண்களின் ஆபாச படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து போலீசார் இணையத்தில் யாராவது பட வாய்ப்பு தருவதாக பெண்களை அணுகினால் புகார் அளிக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.