தமிழில் ‘போக்கிரி’, ‘ஷாஜகான்’, ‘ஆஞ்சநேயா’ உள்ளிட்ட பல படங்கள் இசையமைத்துள்ள, பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் தாயார் சரஸ்வதி (88) சற்று முன்பு உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள மணிசர்மாவின் சகோதரர் ராமகிருஷ்ணாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மாலை அவர் உயிர்பிரிந்தது. இவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
தமிழ் இசையமைப்பாளர் மணிசர்மாவின் தாய் காலமானார்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!
