பிதர் மக்களவைத் தொகுதியில் கர்நாடக மாநிலக் கீதம் பாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்திலே உடல் உபாதையைக் (சிறுநீர்) கழித்த 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பிதர் மக்களவைத் தொகுதி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில், 2019-20 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கான இந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில், கர்நாடக மாநிலக் கீதம் பாடிக்கொண்டிருக்கும் வேலையில், 2 ஆசிரியர்கள் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தின் பொது வெளியில் உடல் உபாதையைக் கழித்துள்ளனர். இச்செயல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹிப்பலாகான் அரசு பள்ளியின் ஆசிரியர் விரேஷா, கங்கராம தண்டா அரசுப் பள்ளியின் ஆசிரியர் விஜயகுமார் ரதோட் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட செய்து, அம்மாநில பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், கல்விதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”டி.சி டாக்டர் எச்.ஆர்.மகாதேவா தலைமையில் நடைபெற்ற விளையாட்டு கூட்டத்தில் அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க டி.சி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, நாங்கள் இரு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்தோம்” என்று குறிப்பிட்டிருந்தது.