Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! ராகுல் காந்திக்கு தமிழ் பெண்ணுடன் திருமணம்….? இது எப்படி இருக்கு….!!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். அந்த வகையில் நேற்றைய தினம் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மார்த்தாண்டம் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெறும் பெண்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது ராகுல் காந்தியிடம் பேசிய பெண் ஒருவர், அவருக்கு தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக கூறினார். இதைக் கேட்ட ராகுல் காந்தி மகிழ்ச்சியுடன் சிரித்தார்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |