20 வருட திரை பயணத்தில் 25 திரைப்படங்களே நடித்திருப்பதன் காரணத்தை ஜெயம் ரவி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பூமி. தற்பொழுது இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றது. இதையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இன்று அவர் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
இந்த நிலையில் நான்கு படம் நடித்தாலும் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதே தனது எண்ணம் என கூறியுள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவிற்கு மனைவியுடன் சென்று ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள், ரசிகர்களுடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடினார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, திரை துறையில் எண்ணிக்கை முக்கியமல்ல. படத்தின் தரம் தான் முக்கியம் என கூறியுள்ளார்.