Categories
சினிமா

“நடிகர்களை ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுறீங்க”….. நடிகர் சத்யராஜ்….!!!

நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தை ஒட்டி மனதின் மையம்அறக்கட்டளை சார்பாக நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஈரோட்டில் தொடங்கப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தற்கொலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள், சமூகத்தில் மிகப்பெரிய தவறு நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது தான்,அவர்களுக்கு சாப்பாடு போடுங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |