செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வைத்தியலிங்கம் அவர்கள் சசிகலாவை எதிர்பாராமல் சந்தித்தார். தற்சமயமாக சசிகலா அம்மா வருகிறார்கள். எதிர்பாராத சந்திப்பே தவிர வேண்டுமென்றே பார்த்ததில்லை. ஓபிஎஸ் என்ன சொன்னார் ? கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றிணைத்து, இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்.
போன தடவை தேமுதிகவை சேர்க்கவில்லை, தேமுதிகவை கூட்டணியில் வைக்க மோடிஜி அவர்கள் சொன்னார் 13 சீட்டு கொடுக்கலாம், கொடுத்து இந்த ஆட்சியை மீட்டெடுப்போம் என்று தான் சொன்னார். எடப்பாடி தான முதலமைச்சர். ஆனால் இவர் அதற்க்கு சம்மதிக்கவில்லை.
இவருக்கு என்ன அகங்காரம்? செல்வாக்கு நம்மிடம் தான் இருக்கிறது என்று சொல்லி பொய் கணக்கு போட்டு, இன்றைக்கு தோற்று விட்டு கட்சியை தாரைவார்த்து விட்டார்.அன்றைக்கு 135 எம்எல்ஏ இருந்தார்கள். இப்போது 65 எம்எல்ஏக்களாக ஆக்கி வைத்துள்ளீர்கள், 37 எம்பி இருந்தது, இப்போது ஒரே ஒரு எம் பி ஆக்கி வைத்திருக்கிறீர்கள் என விமர்சித்தார்.