Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு தற்கொலை…. இவங்க மட்டும்தான் காரணம்…. அண்ணாமலை பரபரப்பு பேட்டி….!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னை தி நகரிலுள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது “நீட்தேர்வை வைத்து பா.ஜ.க அரசியல்செய்யவில்லை. கடந்த 2016, 2017, 2018 போன்ற ஆண்டுகளின் ஆரம்பத்தில் நீட்தேர்வெழுத கடினமாகதான் இருந்தது. எனினும் அது சரிசெய்யப்பட்டது. மாணவர்களின் கைகளையும் , கண்ணையும் கட்டி வைத்துவிட்டு தமிழ்நாடு அரசு எந்த பயிற்சியும் அளிக்காமல் அவர்களை நீட்தேர்வை எழுத வைக்கின்றனர்.

தி.மு.க-வில் உள்ள குடும்பத்தினர் பிள்ளைகள் கவர்னர் கோட்டாவில் மருத்துவம் படித்தனர். தி.மு.க அரசு நீட்விவகாரத்தை கைவிட வேண்டும். ஏனெனில் நீட்தேர்வில் தோல்வியடைந்த மாணவ-மாணவியர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் இருக்கிறது. இது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்கள். இவை வெட்கக்கேடானாது ஆகும்.

நீட்தேர்வு தற்கொலைகளுக்கு திமுக அரசு தான் காரணம். அடுத்தது யார் தற்கொலை செய்வார்கள், போய் பார்க்கலாம் என ரேஞ்ச் ரோவர் காரில் உதயநிதியும், ஓட்டமும் நடையுமாக கனிமொழியும் செல்கிறார்கள். நீட்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட இந்த வருடம் 20 ஆயிரம் குறைந்துள்ளது. டெல்லி முதல்வரை இங்கே கொண்டுவந்து அவர்களது மாடலை இங்கு பயன்படுத்துகிறார்கள்” என்று பேசினார்.

Categories

Tech |