Categories
சினிமா தமிழ் சினிமா

“யாரையுமே பாடி ஷேமிங் பண்ணாதீங்க”…. இன்ஸ்டா லைவ்வில் மஹாலக்ஷ்மி உருக்கம்….!!!!!

மகாலட்சுமி இன்ஸ்டாவில் லைவ்வில் பேசியது வைரலாகி வருகின்றது.

சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் இன்ஸ்டா லைவ்வில் பேசிய மகாலட்சுமி யாரையுமே பாடி ஷேமிங் பண்ணாதீங்க, உங்க வீட்டிலேயே இருந்தாலும் சரி வெளியில் இருந்தாலும் சரி. அவர்கள் ஒல்லியாக இருக்கிறார்கள் குண்டாக இருக்கிறார்கள் என அவர்களை நீங்கள் பாடி ஷேமிங் செய்யாதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் அக்கா, அண்ணா, தங்கச்சி யாராக இருந்தாலும் நீங்க அப்படி செய்யும் போது அவர்களுக்கு என்ன மாதிரி இருக்குமோ அதே போல தான் எனக்கும் இருக்கின்றது. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். என் கணவரை பாடி ஷேமிங் செய்யாதீர்கள் என உருக்கமாக பேசியிருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றார்கள்.

Categories

Tech |