மகாலட்சுமி கொடுத்த பரிசுகள் குறித்து ரவீந்தர் கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் மஹாலஷ்மி தன் மீதான காதலில் கொடுத்த பரிசுகள் குறித்து ரவீந்தர் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, பிரிச்சு மேஞ்சிட்டா, 12மாசமும் 12 கிப்ட் கொடுத்தாள்.
ஒவ்வொரு மாதமும் கேக், சாக்லேட் அனுப்பினாள். என் ஓவியம், என் அலுவலகம் மினியேச்சர் அனுப்பினாள். என்னையா இந்த பொண்ணு இப்படி லவ் பண்ணுது என்று சொன்னேன் என கூறினார். இதை பார்த்த ஆதரவாளர்கள் பணத்துக்காக ஆசைப்படும் ஒரு பெண் இப்படி மாதம் மாதம் பரிசு கொடுத்து அசத்த மாட்டார். இது பணத்திற்காக அல்ல. ரவீந்தர் சொன்னது போல காதலுக்காக தான் நடந்திருக்கிறது. அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் அவர்களைப் பற்றி கண்ட மணிக்கு பேசுவது நிறுத்திவிட்டு உங்கள் வேலையை பாருங்கள் எனக்கு கூறுகின்றார்கள். ஆனால் இதை கேட்ட நெட்டிசன்களோ, இப்படி எல்லாம் பரிசு கொடுத்து அசத்தியதே ரவீந்தரை தன் பக்கம் இலுக்கத்தான். மகாலட்சுமி தன் திட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றார்கள்.