ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அரசு கொண்டுவந்துள்ள விதிமுறை பலரும் அறிந்த ஒன்றுதான் .ஆனால் அதனை முறைப்படி அணிய தவறினால் அபராதம் உள்ளது என்பதை பலருக்கும் தெரியாத ஒன்று. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்ட்ராப்பை முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனை சரியாக போடாவிட்டால் அந்த பயனை ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவது சட்டப்படி குற்றம்.
கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பி ஐ எஸ் சான்றிதழ் அவசியம். குழந்தைகள் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அதில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பெல்ட் பயன்படுத்துவது அவசியம்.மேலும் குழந்தைகளுடன் செல்லும்போது இருசக்கர வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.குறிப்பாக வாகனங்களில் மிக அதிகமான பாரம் ஏற்றிச் சென்றால் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகன ஓட்டுனர் கூடுதலாக 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.