Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுக்குநூறாக நொறுங்கிய ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 7 பேர்…. செங்கல்பட்டில் கோர விபத்து…!!

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. மேலும் 4 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடமையாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |