Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆஃபரோ ஆஃபர்…! “ஒரு ரூபாய்க்கு 1 புடவை”….. ஜவுளிக்கடையில் முண்டியடித்து குவிந்த பெண்கள்….!!!!

புடவை என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான உடை, அவர்களின் அழகை மேலும் அழகாகும் ஒரு மாயக்கண்ணாடி. எந்த வகை பெண்களாக இருந்தாலும் சரி புடவை கட்டினால் அது தனி அழகு தான். பல பெண்களுக்கு புடவை கட்டுவது என்பது மிகவும் பிடிக்கும். அதே புடவையை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் சும்மாவா இருப்பாங்க. கிருஷ்ணகிரியின் பிரபல தனியார் ஜவுளி கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் தனியார் ஜவுளி கடையில் இன்று முதலாம் ஆண்டு முன்னிட்டு ஜவுளி கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட் மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதைக்கேட்ட கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர்கள், ஆண்கள் அதிகாலை முதல் கடை திறப்புக்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர். கடை திறந்த பிறகு அலைமோதிய கூட்டம் புடவைகளை வாங்க கடைக்குள் ஆர்வத்துடன் புகுந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவுளி கடை நிர்வாகம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஒரு ரூபாய்க்கு முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு புடவை வழங்கப்பட்டது.

Categories

Tech |