ரன்வீர் கபூர் நடிப்பில் ரிலீஸாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகி உள்ளது.
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பிரம்மாஸ்த்ரா’. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். நடிகை யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.
அந்நியன், ராவணன் படங்களின் ஒளிப்பதிவாளர் வேலாயுதம் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பிரம்மாஸ்திரா’ படம் மூன்று பாகங்களாக உருவாகும் நிலையில், இதன் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தின் கதையானது டிஜேவாக ஜாலியான பையனாக இருந்து வரும் ரன்வீர் கபூர் இஷா என்னும் ஆலியா பட்டை பார்த்த உடனே காதலில் விழுகின்றார். அவருக்குள் இருக்கும் அந்த அக்னி சக்தி வெளிப்படுகின்றது.
அதன் பின்னர் தனக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள கதாநாயகன் எடுக்கும் முயற்சியும் தீய சக்திகளிடம் இருந்து தன்னையும் தனது காதலியும் அந்த பிரம்மாஸ்திரத்தையும் எப்படி காப்பாற்றுகின்றார் என்பதே படத்தின் கதையாகும். இத்திரைப்படத்தில் விஷுவல் எக்ஸ்பிரஸ் வேற லெவலில் இருப்பதாகவும் திரைக்கதை சுமாராகவே இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். கதை சுவாரஸ்யம் இல்லாததால் சூப்பராக வர வேண்டிய இத்திரைப்படம் சுமாராகவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது.