Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை….. ஆதார் போலவே தனித்துவமான ID….. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை போல தனித்துவமான பண்ணை ID வழங்கலாம் என்று மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் இந்த ஐடியின் மூலமாக விவசாயிகள் அரசாங்கத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த ஐடியை கட்டாயமாக ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும். இனிவரும் நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கும் தனித்துவமான இந்த ஐடி திட்டத்தை செயல்படுவதற்கான ஆதார் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சரிபார்ப்பின் மூலமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோடியே 92 லட்சத்து பள்ளி குழந்தைகள் பல்வேறு அரசாங்க திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த ஆதார் முறைதான் பின்பற்றி வருவதாக ஆதார் அமைப்பின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்தின் எந்தவித நலத்திட்ட உதவிகளையும் பெறாத குடும்பத்திற்கும் இந்த திட்டத்தின் மூலமாக அனைத்து நலன்களும் சென்றடையும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |