Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த தகவலின் பேரில்…. “விரைந்து திருடர்களை மடக்கிப் பிடித்த போலீசார்”…. கமிஷனர் பாராட்டி சான்றிதழ்…!!!!!

செல்போன் திருடர்களை மடக்கிபிடித்த காவலரை கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சென்ற இருபதாம் தேதி நள்ளிரவு ஆனந்த் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவர்களை மடக்கி பிடிக்க போலீஸ் கமிஷனர் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்தார்.

அப்பொழுது செல்போன் பறித்து மூவரும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற பொழுது அங்கு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஏட்டுகள் டேவிட் சாலமன், செந்தில், ஜோசப் சகாயராஜ் உள்ளிட்டோர் மூன்று பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். இதன் பின்னர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்,, கொள்ளை அடித்து வைத்திருந்த 3 செல்போன்கள் உட்பட நான்கு செல்ஃபோன்களை பறிமுதல் செய்தார்கள். இதில் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த போலீசாரை கமிஷனர் பாராட்டி பணி நற்சான்றிதழ் வழங்கினார்.

 

Categories

Tech |